சென்னை பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின், மாவட்ட பொருளாதார பிரிவு நிர்வாகிகளின் அறிமுக கூட்டம்
3 நவம்பர் 2025 அன்று சென்னை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் சென்னை பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களின், மாவட்ட பொருளாதார பிரிவு நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொருளாதாரப் பிரிவின் மாநில அமைப்பாளர் டாக்டர்.காயத்ரி சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகளுக்கு வழிகாட்டினார். வரவேற்புரை மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொருளாதார பிரிவு அமைப்பாளர் அஸ்வின் காந்திலால் ஜெயின் வழங்கினார். நிகழ்ச்சியை கவிஞர் முத்துராமன் தொகுத்து வழங்கினார். இந்த பிரிவின் பணிகள் மற்றும் அமைப்பு ரீதியான விஷயங்களை பொருளாதார பிரிவின் மாநில செயலாளர் கோ. ரமேஷ் விளக்கினார்.நன்றியுரையை சென்னை கிழக்கு மாவட்ட பொருளாதார பிரிவின் அமைப்பாளர் முகுந்தன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கும், இணை அமைப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட செய்யலாளர்களுக்கும் நன்றி.
கோ ரமேஷ்,
மாநில செயலாளர்,
மற்றும் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர்,
பொருளாதாரப் பிரிவு









