தொழில் குறிப்பு:

என்னுடைய பெயர் கோ.ரமேஷ், நான் Bse(maths) ,CFTe படித்திருக்கிறேன்.

கடந்த 30 ஆண்டுகளாக பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறேன். பொருளாதார ஆலோசகராக இருந்து வருகிறேன்.

ஏழு வருடங்களுக்கு மேல் சன் நியூஸ் தொலைக்காட்சியில் வர்த்தக உலகம் எனும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நேரலையில் நேயர்களுக்கு பங்கு சந்தை பற்றிய சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளேன்.

வின் தொலைக்காட்சி சி. என். பி. சி டிவி, விஜய் டிவி, புதிய தலைமுறை டிவி, புதுயுகம் டிவி, ஜெயா டிவி உள்பட பல டிவி நிகழ்ச்சிகளில் பொருளாதார ஆலோசனை வழங்கி உள்ளேன்.

அரசியல் குறிப்பு:

நான் பாரதிய ஜனதா கட்சியில் 1989 முதல் உறுப்பினராக உள்ளேன் கிளை செயலாளர் பொறுப்பு ஆரம்பித்து மண்டல் துணைத் தலைவர், மாவட்ட தொழில் பிரிவு துணை செயலாளர், கலைக் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர், மீடியா மாநில செயலாளர், ஆறு வருடங்கள் தொழில் பிரிவு மாநில செயலாளர் ஆகிய பதவிகளில் கட்சியைப் பணியாற்றிய உள்ளேன்.

தற்பொழுது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக பொறுப்பளிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்